தெளிவான பரிந்துரைகளை மீனவர்கள் முன் வைக்க வேண்டும் – பொன். ராதாகிருஷ்ணன்

மீனவ பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தெளிவான பரிந்துரைகளை மீனவர்கள் முன் வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்கள் முன் வைக்கும் பரிந்துரைகளை மையமாக வைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நம் மீனவ சொந்தங்களிடம் நான் தொடர்ந்து வலியுறுத்துவது, தயவுசெய்து இன்றைய  நிலையை புரிந்து கொண்டு, இலங்கையில் இருக்க கூடிய தமிழ் மீனவர்களோடு நாம் மோதுகிறோம்.

அந்த போக்கினை விட்டுவிட்டு,இரண்டு நாட்டு தமிழ் மீனவர்களும் நிம்மதியாக வாழும் வகையில்,ஒரு தீர்வினை நீங்களே தயார் செய்யுங்கள், அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த நாங்களும் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

அமைச்சர்தெளிவுபரிந்துரைபிரச்சனைபொன்.ராதாகிருஷ்ணன்மத்தியமீனவர்கள்வலியுறுத்தல்
Comments (0)
Add Comment