ஒரு நபர் மட்டுமே உள்ளது குடும்பத்திற்கு மாதம் 12 கிலோ அரிசியும், 2 பேர் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் 16 கிலோ அரிசியும் தற்போது உள்ளது போலவே தொடர்ந்து வழங்கப்படும். 5 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு இனி 20 கிலோவுக்கு பதிலாக மாதம் 25 கிலோ அரிசியும், 7 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 25 கிலோ அரிசியும், 10 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 50 கிலோ அரிசியும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த சட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு ஆண்டுக்கு 1,193.30 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவித்துள்ளது.