இந்த சர்ச்சை குறித்து முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே சந்துரு, தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காதது குற்றமல்ல என்று கூறினார்.
கேரள பள்ளிமாணவன் தேசிய கீதம் பாட மறுத்தது தொடர்பான வழக்கு ஒன்றில் இந்திய உச்சநீதிமன்றம் இது குறித்து ஏற்கனவே விளக்கமளித்திருப்பதாக தெரிவித்த சந்துரு, தேசிய கீதம் பாடமறுப்பதோ, பாடும்போது எழுந்து நிற்க மறுப்பதோ குற்றச்செயல் அல்ல என்றும் வலியுறுத்தினார்.