தேசிய சுனாமி ஒத்திகை நடவடிக்கை தொடர்பான முன்னாயத்த  கலந்துரையாடல் முல்லைத்தீவில்….

தேசிய சுனாமி ஒத்திகை நடவடிக்கை தொடர்பான முன்னாயத்த  கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் 05.09.18 அன்று தேசிய சுனாமி ஒத்திகை இலங்கையில் முல்லைத்தீவு,காலி,அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன

இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் ஏற்பாட்டில் இலங்கையில் மூன்று மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு சுனாமி ஒத்திகை நிகழ்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒத்திகைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று  இன்று  மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவிப்பணிப்பாளர் சி.லிங்கேஸ்வரகுமார் அவர்களின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல்  நடைபெற்றுள்ளது.

இந்த முன்னாயத்த கலந்துரையாடலில் முப்படையினர்,பொலீஸார்,பிராந்திய சுகாதாரண பணிமனை அதிகாரி,வலயக்கல்வி பணிமனை அதிகாரி, கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி,பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலகர்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அமைப்புக்களில் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதன்படி எதிர்வரும் 05.09.18 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் சுனாதி ஒத்திகை பகுதியாக வட்டுவாகல்தொடக்கம்,,செல்வபுரம்,மணல்குடியிருப்பு,கோவில்குடியிருப்பு,முல்லைநகர்,வண்ணாங்குளம் போன்ற ஆறு கிராம சேவை பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

 குறித்த பகுதியினை சேர்ந்த கரையோர மக்கள் அனைவரையும் சுனாமி ஒத்திகைஊடாக கிராமத்தில் இருந்து வெளியேற்றி அவர்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கான சகல ஏற்பாட்டு உதவிகளும் வழக்கும் ஒத்திகை நிகழ்வு புதன் கிழமை நடைபெறவுள்ளதாகவும் இதனால் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்சுனாமிமாவட்டசெயலகம்முன்னாயத்தம்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment