அதில் “நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணையத்தை உருவாக்கும் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தற்போது நடைமுறையில் இருக்கும கொலிஜியம் முறையே தொடர்ந்து அமலில் இருக்கும்” என்று தீர்ப்பளித்தனர். . மேலும் இந்த வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றக்கோரிய மத்திய அரசின் மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்கவும், நீதிபதிகள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் போன்றவற்றை இறுதி செய்யவும், கொலிஜியம் எனப்படும் தேர்வுக்குழு முறை பின்பற்றப்பட்டு வந்தது.
இந்த முறையை மாற்றி, நீதிபதிகள் நியமனத்திற்கான தேசிய ஆணையத்தை உருவாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராகவும், சட்டத்திற்கு அரசியல் அங்கீகாரம் அளிக்கும் சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், உச்சநீதிமன்றத்தில் பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் சங்கம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சில தனிநபர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிபதிகள் J.S. கெஹர், மதன் B. லோகூர், சலமேஷ்வர், குரியன் ஜோசஃப், A.K. கோயல் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.
மனுதாரர்கள் தரப்பில், ஃபாலி நாரிமனும், மத்திய அரசு தரப்பில், அரசின் தலைமை வழக்கறிஞர் முகல் ரோஹத்கியும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். கொலிஜியம் முறையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது முறையாக இல்லை என மத்திய அரசு வாதிட்டது. நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடு பாதிக்கப்படும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் நீதிபதிகள் நியமன ஆணையத்தில் பிரபல பிரமுகர்கள் இடம்பெறுவதற்கு மனு தாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இன்று காலை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நீதிபதிகள் நியமன ஆணையம் அரசியல் சானத்திற்கு எதிரானது, கொலீஜியம் முறை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அதற்கு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.