தேதிமுதிக அலுவலகத்தில் யோகா தினம்: யோகாசனம் செய்தார் விஜயகாந்த்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் யோகா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது

இதில் கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உட்பட தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

பின்னர் பேசிய அவர், யோகாவின் பெருமைகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது யோகாசனத்திற்கு ஐ.நா. அங்கீகாரம் அளித்தது பெருமை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம்சட்டமன்ற உறுப்பினர்கள்தேமுதிகநிகழ்ச்சியோகா தினம்யோகாசனம்விஜயகாந்த்
Comments (0)
Add Comment