தேமுதிக அமைப்புத் தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்படும்: விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக அமைப்புத் தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்படும் என கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தேமுதிக அமைப்புத் தேர்தல் தமிழகம் முழுவதும் 4 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட அமைப்பு தேர்தல் 2017 மார்ச் 9 முதல், ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.

இதற்காக, உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவரும் 2017 பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் புதுபித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு புதுபித்துக் கொண்டவர்கள் மட்டுமே கட்சி அமைப்புத் தேர்தலில் போட்டியிட தகுதிபெறுவர்.

மேலும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தாங்கள் வசிக்கின்ற பகுதியில், புதிதாக கழகத்தில் இணைய விரும்புகின்ற, இளைஞர்களையும், பொதுமக்களையும் கழக உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும்.

கழகத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இந்த கழக அமைப்பு தேர்தலில் போட்டியிட முடியாது. இரண்டாம் கட்ட அமைப்பு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அமைப்புத் தேர்தல்தமிழகம்தேமுதிகவிஜயகாந்த்
Comments (0)
Add Comment