பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேமுதிக எம்எல்ஏ உட்பட 19 பேரின் ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது. தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி உட்பட 19 பேரின் ஜாமீன் மனு எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விருகம்பாக்கம் காவல்துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரினர்.
இதனைத்தொடர்ந்து, நீதிபதி கணேசன், காவல்துறையினருக்கு அவகாசம் வழங்கியதுடன், ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெறும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார். கடந்த 31-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பத்திரிகையாளர்களை தேமுதிகவினர் தாக்கினர்.
இது தொடர்பாக தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி உட்பட 19 பேரை விருகம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.