தேமுதிக கட்சியின் அங்கீகாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்

தேமுதிக கட்சியின் அங்கீகாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக சட்ட சபை தேர்தல்களில் ஒரு கட்சி குறைந்த பட்சம் 9 எம்.எல்.ஏக்களை பெற்றிருக்க வேண்டும்.

அப்போது தான் அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்படும். கடந்த தேர்தலில் தேமுதிக 9 எம்.எல்.ஏக்களுக்கு மேல் பெற்றிருந்ததால் அக்கட்சியின் அங்கீகாரம் தொடர்ந்தது. ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அக்கட்சியின் அங்கீகாரம் பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்குரிய கட்சிகள், தேர்தலில் அங்கீகாரத்திற்ரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், அக்கட்சியின் அங்கீகாரம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் தேமுதிகவின் அங்கீகாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரத்தாகது என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த நடைபெறும் தேர்தலில் ஆறுசதவீதம், அதாவது 9 எம்.எல்.ஏக்களை பெறாவிட்டால் அதன் அங்கீகாரம் ரத்தாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அங்கீகாரம்அதிகாரிஅறிவிப்புஐந்தாண்டுகட்சிகமிஷன்செல்லுபடிதேமுதிகதேர்தல்
Comments (0)
Add Comment