தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் 75 தொகுதிகளுக்கு 4 கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று 5–வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் 75 தொகுதிகளுக்கு 4 கட்டமாக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இன்று 5–வது வேட்பாளர் பட்டியலை தே.மு.தி.க. வெளியிட்டது. அதில் 18 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இடம் பெற்று உள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
1. தருமபுரி– இளங்கோவன் (தருமபுரி மாவட்ட கழக செயலாளர்) 2. ஆரணி– பாபுமுருக வேல் எம்.எல்.ஏ. (திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்) 3. பாப்பிரெட்டிப் பட்டி – பாஸ்கர் எம்.எல்.ஏ. (தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர்) 4. அரியலூர் – இராம ஜெயவேல் (அரியலூர் மாவட்ட செயலாளர்) 5. மதுரை மத்தி– சிவ முத்துக்குமார் (மதுரை மாநகர் மாவட்ட செயலாளர்) 6. ராமநாதபுரம் – சிங்கை ஜின்னா (ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்) 7. ஆலந்தூர் – சந்திரன் (வர்த்தகர் அணி செயலாளர்) 8. மதுரை வடக்கு – முஜிபூர் ரஹ்மான் (தொழிற்சங்க பேரவை பொருளாளர்) 9. கடையநல்லூர் – கோதை மாரியப்பன் (நெசவாளர் அணி துணைச் செயலாளர்) 10. தியாகராயநகர் – குமார் (சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர்)
11. பாலக்கோடு – காவேரி வர்மன் (தருமபுரி மாவட்ட பொருளாளர்) 12. செய்யார் – சரவணன் (திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்) 13. ஏற்காடு (தனி)– கே.சி.குமார் (பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றிய பொரு ளாளர்) 14. குன்னூர் – சிதம்பரம் (நீலகிரி மாவட்ட அவைத் தலைவர்) 15. தொண்டாமுத்தூர் – தியாகராஜன் (தொண்டா முத்தூர் ஒன்றிய செயலாளர்) 16. சிவகாசி – சுதாகரன் (திருத்தங்கள் நகர செயலாளர்) 17. திருச்சுழி – ராஜூ (தலைமை பொதுக்குழு உறுப்பினர்) 18. திருச்செந்தூர்–செந்தில் குமார் (திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர்) தே.மு.தி.க. இதுவரை 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. இன்னும் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.