தேர்தல் ஆணையம் பிடித்துள்ள பணம் மிகவும் குறைவுதான். இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் பேட்டியில் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழகத்தில் பா.ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா உதவியுடன் 2 அல்லது 3 இடங்களில் வெற்றி பெறும் என்று சுப்பிரமணியசாமி கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. பா.ஜனதாவில் தான் எல்லா தலைவர்களும் அவர்களது சொந்த கருத்துகளை கூற சுதந்திரம் உண்டு.
வேறு எந்த கட்சியிலும் இது கிடையாது. தேர்தல் ஆணையம் தற்போது பிடித்துள்ள பணம் மிகவும் குறைவுதான். இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுக்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே ஆயிரக்கணக்கான கோடி பணம் விதைக்கபட்டு இருக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா தமிழகத்தில் பிரசாரம் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.