தேனி மாவட்ட அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம், தங்க தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றதால், நிதி அமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
தேனி மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட தங்க தமிழ்செல்வன் தலைமையில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம், நேற்று நடைபெற்றது. தேனி மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தை ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பறக்கணித்தனர்.
எனினும், தங்க தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்செல்வன், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.