யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின் தெரிவிக்கப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் தஞ்சை மாவட்ட சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை எனவும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார். புதிய தமிழகம் கட்சியின் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவில் இணைந்தது பற்றி கருத்து தெரிவித்த கிருஷ்ணசாமி, கட்சி தாவல் தடை சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.