தேர்தல் பணிகளை கண்காணிக்கும் பறக்கும் படையில் துணை ராணுவப்படை வீரர்கள்: நசிம் ஜைதி

தேர்தல் பணிகளை கண்காணிக்கும் பறக்கும் படையில் மத்திய அரசு அதிகாரி மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் இடம்பெறுவார்கள் என நசிம் ஜைதி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னையில் இன்று தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிறப்பாக செய்திருப்பதாக அரசியல் கட்சிகள் பாராட்டு தெரிவித்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை தேவை என்றும் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படையில் மத்திய அரசு அதிகாரி மற்றும் துணை ராணுவப்படையினர் இடம்பெறுவார்கள்.

தனியார் நிறுவனங்கள் தேர்தலன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என வலியறுத்தி உள்ளோம். ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா என்பது தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படும் என்றார்.

துணை ராணுவப்படை வீரர்கள்தேர்தல் பணிகள்நசிம் ஜைதிபறக்கும் படை
Comments (0)
Add Comment