தேர்தல் காலப்பகுதியில் இடம்பெறும் நிதி மோசடி, ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அரச நிதி மற்றும் நாட்டின் நிதி பாரிய அளவில் தேர்தல் காலப்பகுதியில் மக்கள் பிரதிநிதிகளால் ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இது தொடர்பாக ஊழல் மோசடி எதிர்ப்பு அமைப்பு பல்வேறு மட்டங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
இதன் காரணமாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் அனுமதியுடன் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தேர்தல ஆணைக்குழுவின் சட்டத்துறை பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
குறித்த திருத்தச்சட்டமூலம் தற்போது அரச சட்ட திருத்த தயாரிப்புப் பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது