முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று (28) காலை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாவட்ட செயலகம் முன் இடம்பெற்ற மகாவலி தொடர்பான விளக்கவுரை நிகழ்த்தும் கூட்டத்தில்,இப் போராட்டத்தை ஒழுங்கமைத்த மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வியஜகுமார் நவநீதன் தெரிவிக்கையில்,
சிங்கள மக்களை பொறுத்தவரை மகாவலி திட்டம் பல வரப்பிரசாதங்களை பெற்றுத்தருவதாக இருந்தாலும் தமிழர்களை பொறுத்தவரையில் மகாவலி திட்டம் ஆக்கிரமிப்பின் அறிகுறியே.
தொன்றுதொட்டு இன்றுவரை மகாவலி திட்டம் தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உண்டு.
கொக்குளாய், கொக்குத்தொடுவாய் மற்றம் கருநாட்டுகேணி உள்ளிட்ட கிராமங்கள் 1984ம் ஆண்டு வலுக்கட்டாயமாக இடப்பெயரச் செய்யப்பட்டு அப்பகுதி மக்களின் வாழ்வாதார நிலங்களை சிங்கள மக்களுக்கு வழங்கும் நோக்கோடும் 1988ம் ஆண்டும், 2007ம் ஆண்டும் அரச ஆணைக்கு அமைவாக கொக்குள்ளாய் உட்பட34 கிராமங்கள் மகாவலி திட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. என்றார்.