தொழிலாளர் தினமான மே தினத்தில் கழுதைகளை கௌரவித்த நாடு…

உலகம் முழுவதும் தொழிலாளர் தினமான மே தினம் கொண்டாடப்பட்ட நிலையில் லத்தீன் அமெரிக்க நகரான ஒடம்பாவில் , கழுதைகளுக்கு கௌரவம் செய்யப்பட்டது.

கழுதைகளுக்கு தலை முதல் பாதம் வரை வண்ண ஆடைகள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கழுதைகளுக்கு தங்கள் மரியாதையை செலுத்தினர்.

பந்தயங்கள், போலோ ஆட்டங்கள் என்று கழுதைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.

சுமார் 60 ஆண்டுகளாக உழைக்கும் விலங்கான கழுதையை லத்தீன் அமெரிக்க மக்கள் இப்படி கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கழுதைகள் கௌரவிப்புலத்தீன் அமெரிக்கா
Comments (0)
Add Comment