யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நல்லூர் பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதான சின்னத்துரை சசிகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் ஊரெழுவில் உள்ள தோட்டமொன்றில் புல்லு வெட்டிக்கொண்டு இருந்த சமயம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டாதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.