தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளம் பெற நடவடிக்கை!

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தத்தின் 10 ஆவது அமர்வு தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன் போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்…

1000 ரூபா , 1500 ரூபா ,2000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்காவிடினும் நியயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.ஒன்றரை வருட காலமாக கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்களை ஏமாற்றினார்கள் என மக்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.2500 ரூபாவாக வழங்கப்படும் சம்பளத்தில் புதிய சம்பள நடைமுறை தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த சம்பள தொகை புதிதாக வழங்கப்படும்.

உயர்வுசம்பளம்தொழிலார்கள்தோட்டம்பாராளுமன்ற உறுப்பினர்மலையகம்வடிவேல் சுரேஷ்
Comments (0)
Add Comment