சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ் குமார் அக்னி ஹோத்திரி மற்றும் சசீதரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெறுவதாகவும் அந்த பணிகள் முடியும் வரை அவகாசம் அளிக்குமாறும் தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்தனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக சீனிவாசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.