வவுனியாவில் இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வவுனியா பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் தனது நண்பர் ஒருவருக்கு ஒரு தொகை பணத்தை சில மாதங்களுக்கு முன்னர் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அப்பணத்தை மீள தருமாறு கடந்த சில நாட்களாக நண்பரிடம் அவர் கோரி வந்த நிலையில் நண்பர் பணத்தை வழங்காது இழுதடிப்பு செய்துள்ளார்.
இதனால் பணம் கொடுத்த இளைஞர் மனவிரக்தியடைந்த நிலையில் நஞ்சருந்திய ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.