ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது விடயத்தில் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட முடியாது என்றும், மனசாட்சியின் பிரகாரம் மக்கள் பக்கம் நின்றே வாக்களிக்க நேரிடும் என்றும் கட்சியிலுள்ள கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.தே.கவின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அக் கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர், வாக்கெடுப்பின்போது நடுநிலை வகிப்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.