இந்த நிலையில் இன்று நடிகை நயன்தாரா சென்னை காசி திரையரங்கில் ‘அறம்’ படம் பார்க்க வந்தார். அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் உற்சாகமாகி அவரை நெருங்கினர். ஆனால் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் நயன்தாராவை பாதுகாவலர்கள் பத்திரமாக திரையரங்கிற்குள் அழைத்து சென்றனர்.
படம் முழுவதையும் நயன்தாரா பார்த்ததாகவும், எந்தெந்த காட்சிகளில் கைதட்டல், எந்தெந்த காட்சிகளில் சோகம் ஏற்பட்டது என்பதை நயன்தாரா கூர்ந்து கவனித்ததாகவும் கூறப்படுகிறது. நயன்தாராவின் வருகையால் காட்சி முடியும் வரை திரையரங்கம் பரபரப்பாக இருந்தது