நாகை மாவட்டம் சீர்காழியில் மரக்கன்று நடுகை

நாகை மாவட்டம் சீர்காழியில் நம்மால் முடியும் குழு மற்றும் பசுமை புரட்சிக் குழு ஆகியவை இணைந்து 500 மரக்கன்றுகளை நட்டனர்.

புதிய தலைமுறையின் நம்மால் முடியும் குழு, சீர்காழி இமயவரம்பன் கார்டன் குழுமம் மற்றும் தமிழ்நாடு – புதுச்சேரி கட்டட பொறியாளர் சங்க கூட்டமைப்பின் பசுமை புரட்சிக் குழு ஆகியவை இணைந்து மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டன.

சீர்காழி நகரின் பிரதான வீதிகள், வட்டாட்சியர் அலுவலகம், தமிழிசை மூவர் மணிமண்டபம் மற்றும் புதிய நகர் பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளின் உதவியுடன் ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை சுற்றி பாதுகாப்பு கூண்டுகளுடம் நிறுவப்பட்டுள்ளன. மேலும் மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைக்க உள்ளதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.

சீர்காழிநடுகைநாகைமரக்கன்றுமாவட்டம்
Comments (0)
Add Comment