நாகை மாவட்டம் நம்பியார் நகரைச் சேர்ந்த சத்தியன் என்பவர் உட்பட 7 மீனவர்கள், விசைப்படகில் இருநாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்தபோது, எல்லைதாண்டி பருத்தித்துறை கடற்பரப்பில் நுழைந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தற்போதைய கைது நடவடிக்கை மூலம் இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.