நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வண்டி விபத்து..

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த கெப் வண்டி, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியா – மதவாச்சி வீதியில் கும்புக்கொல்ல பகுதியில் இன்று காலை  9 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த  விபத்தில் 27 வயதான ஆண் ஒருவரும் 25 வயதான பெண்னொருவரும் ஒரு வயது குழந்தையும்  காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில்  மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதர் மஸ்தான்.செண்பகம்பொலிஸார்மதவாச்சி
Comments (0)
Add Comment