நாடுமுழுவதும் இன்று 66- வது குடியரசு தின விழா கோலகலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக இந்தியா வந்துள்ளார். டெல்லி இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். போர் நினைவுச்சினனத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
டெல்லி ராஜ்பாத் சாலையில் குடியரசு தினவிழா இன்று காலை தொடங்கியது. விழாவில் கலந்து கொள்ள வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி வரவேற்றார். முப்படை தளபதிகளையும் பிரதமர் மோடி ஒபாமவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.விழா நடக்கும் இடத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைத்துச் செல்லப்பட்டார். விழா நடக்கும் இடத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்தார். அவரை துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, மேலும் மந்திரிகள் வரவேற்றனர்.பின்னர் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் ஒலிக்கப்ட்டது. பின்னர் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரணாப் உள்ளிட்டோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. முகுந்த் வரதராஜன் மனைவி இந்துவிடம் ஜனாதிபதி விருதை வழங்கினார். தொடர்ந்து ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.தற்போது ராணுவ அணிவகுப்பு மரியாதை தொடங்கியது அணிவகுப்பு மரியுதையை அதிபர் ஒபாமா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் ஏற்று கொண்டனர்.தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.