நாடு முழுவதும் நாளை 67ஆவது குடியரசு தினம்

நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

67வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின் முக்கிய நகரங்கள், சுற்றுலா தளங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க, ராணுவத்தினர் உஷார் நிலையில் உள்ளனர். எல்லை யோர கிராமங்களில் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

இந்தியாகுடியரசுதினம்தீவிரம்பாதுகாப்பு
Comments (0)
Add Comment