நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்று தென்கிழக்கு திசையிலிருந்து வீசும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் வேகம்
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோமீற்றர் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70-80கிலோ மீற்றர் வரை) அதிகரித்து வீசக்கூடும் எனவும் எச்சிரிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் வேளைகளில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது .