நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கவே தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – செல்வம் அடைக்கலநாதன்

நாட்டில் பொருளாதாரத்தை சீரழிக்கவே தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு தீவிரவாதிகளின் தாக்குதலின் நோக்கம் நாட்டினுடைய பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்பதும், மக்கள் செறிந்து கூட்டமாக இருக்கின்ற இடங்களிலே தாக்குதலை மேற்கொள்வது. என்கின்ற திட்டத்துடன் அவர்கள்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகள் மக்கள் செறிந்து வாழுகின்ற அல்லது வழிபடுகின்ற வணக்க ஸ்தலங்களில்

தாக்குதல்களை மேற்கொள்ளுகின்றபோது பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அங்கு காணப்படுகின்றதாகவும், எனவே இந்த விடயத்திலே அரசாங்கம் தன்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்
Comments (0)
Add Comment