நாட்டில் காசநோயாளார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில்  காச நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு 8511 பேர் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதோடு அவர்களில் 8112 பேர் புதிதாக இனங்காணப்பட்ட நோயாளர்கள் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நோயினை ஆரம்பத்திலேயே இனங்கண்டு, அதற்குரிய சிகிச்சைப்பெற்றுக்கொள்ளுமாறு நோயாளிகள்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்  நோய் தொற்றுக்குள்ளான நபரிடமிருந்து மற்றுறொரு நபருக்கு இந்நோய் பரவக் கூடியது எனவும் மருத்துவர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

எச்சஎரிக்கைகாசநோய்சுகாதாரம்வைத்தியர்கள்
Comments (0)
Add Comment