நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தில்   20 பேர் பலியானதுடன், 24 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, முழுமையாக சேதமடைந்துள்ள வீடுகளுக்காக 2.5 மில்லியன் ரூபா வரையில் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை , மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலநிலைதொற்று நோய்நட்ட ஈடுபாதிப்பு.
Comments (0)
Add Comment