நாட்டில் போர் இடம்பெற்ற காலத்திலும் பிரபாகரன் காடுகளை பாதுகாத்தார் – ஜனாதிபதி…

தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் நாட்டில் போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் காடுகள் அழியவிடாமல் பாதுகாத்தார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வடக்கில்தான் அதிகமாக காடுகள் காணப்படுவதாகவும், இந்நிலையில் 30 ஆண்டுகளாக அங்கு போர் இடம்பெற்றாலும்  , பிரபாகரன் காடுகளை அழியவிடாமல் பாதுகாத்தார் என ஜனாதிபதி குறி[ப்பிட்டுள்ளார்.

எனவே பிள்ளைகளின் பிறந்தநாளில் கேக் வெட்டாமல்  மரக்கன்றுகளை நடவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காடுகள்ஜனாதிபதிபிரபாகரன்வடக்கு
Comments (0)
Add Comment