நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெசோ’ ஆர்ப்பாட்டம்

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு காண, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நாளை மறுதினம் நடக்கும், ‘டெசோ’ ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை மாவட்ட தி.மு.க., தொண்டர்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களிலிருந்தும், தொண்டர்களை வரவழைத்து, குறைந்தபட்சம், 25 ஆயிரம் பேரை பங்கேற்க வைக்க, மாவட்டச் செயலர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு, பொது ஓட்டெடுப்பு; இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐ.நா.குழுவினரின் விசாரணையை இந்தியாவில் நடத்த, அக்குழுவிற்கு விசா வழங்க, மத்திய அரசு முன்வர வேண்டும்’ என்பது உட்பட, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கருணாநிதி தலைமை வகித்து, துவக்கி வைக்கிறார். தென் சென்னை, வட சென்னை மாவட்டங்களைத் தவிர, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களும் திரண்டு வர வேண்டும் என, மாவட்டச் செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பின், மாவட்டச் செயலர் பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, கட்சி பிரமுகர்கள் தங்கள் பலத்தை காட்டுவதற்கு, தொண்டர்களை திரளாக அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். எனவே, ஆர்ப்பாட்டத்தில், குறைந்தபட்சம், 25 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல்அரசுஇலங்கைஉடனடியாகஎடுக்ககாணதமிழர்கள்தீர்வுநடவடிக்கைகளைமத்தியவிரும்பும்வேண்டும்
Comments (0)
Add Comment