திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பரப்புரையில் விஜயகாந்த் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
நான் பேச ஆரம்பித்தால் கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் தாங்க மாட்டார்கள். கிரானைட் வழக்கில் சகாயம் அறிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன். கிரானைட் வழக்கில் இருந்து பிஆர் பழனிச்சாமியை நீதிபதி விடுதலை செய்ததில் உள்நோக்கம் உள்ளது. நீதிபதி மகேந்திர பூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பிஆர்பி கைது செய்யப்படாதது ஏன்?
6 கட்சிகளுக்கும் கொள்கை இல்லை என்று கூறுகிறார்கள். ஒரே கொள்கைக்காக நாங்கள் 6 கட்சிகளும் இணைந்துள்ளோம். திமுக தலைவர் கருணாநிதி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று கூறினார்கள். ஆனால் ஐந்து முறை முதல்வராக இருந்தபோது என்ன செய்தீர்கள். திமுக, அதிமுகவிற்கு மாற்று நாங்கள் தான். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். தமிழகத்திலேயே திருவள்ளூரில் தான் அதிக மணல் கொள்ளை நடக்கிறது. படிப்படியாக மதுவிலக்கு என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு பொய்யானது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.