நாயாறு கடற் பரப்பில் காணாமல்போன படகு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலூர் பகுதியில் இலங்கையர்களின் படகொன்று மீட்கப்பட்டுள்ளதாக தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு, நாயாறு கடற் பரப்பில் மீன்பிடிக்காக சென்ற மூன்று பேருடன் காணாமல்போன படகே இவ்வாறு மீட்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.

சிலாபம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள், முல்லைத்தீவு – நாயாறு கடல் பகுதியிலிருந்து கடந்த 12 ஆம் திகதி மீன்பிடிக்காக கடலுக்குச் சென்றனர்.

இந்த நிலையில், அவர்கள் பயணித்த படகு மீட்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த மூன்று மீனவர்களின் நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

எனினும், குறித்த படகில் மீனவர்களோ, அல்லது மீன்பிடி உபகரணங்களோ இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

சிலாபம்தமிழகம்நாயாறுபடகுமீனவர்
Comments (0)
Add Comment