நாயாறு- நீராவியடியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் செயல் – சி.தவராசா…

தமிழ் மக்களின் நெஞ்சங்களை புண்படுத்தும் மோசமான செயலாகவே நாயாறு- நீராவியடி பகுதியில் புத் தா் சிலை வைக்கப்பட்டிருப்பதாக   முன்னாள் வடமாகாண எதிா்க்கட்சி தலைவா் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

காலம் காலமாக தொல்பொருள் திணைக்களம் செய்த அபகாிப்பின் மற்றொரு பாிமாணமாகவும் இது அமைந்துள்ளதாகவும் அவர்  குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலேயே  அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் , காலங் காலமாகத் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலமாக விளவங்கிய நீராவியடிப் பிள்ளையார் கோயிலின் வளவிற்குள்  புத்தர் சிலை அமைக்கப்பட்டமையானது,

தொல்பொருள் திணைக்களம் தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பின் இன்னோர் பரிமாணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில்  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஓர் வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில்,

பொலிசாரின் அனுசரணையுடன் செய்யப்பட்ட இந்த நடவடிக்கை ஏற்கனவே நொந்து போயிருக்கின்ற முல்லைத்தீவு மக்களிற்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற ஓர் செயலாக அமைகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  இன்று தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதி நிதிகளா ல்தான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம்  பதவியில் உள்ளது.

இவ்வாறான சூழலிலும் தொல்பொருள் திணைக்களம் இப்படியான செயல்களில் ஈடுபடுவதனை  தமிழ்ப் பிரதிநிதிகள் மௌனிகளாக இருந்து வேடிக்கை பார்க்காது அரசிற்கு அழுத்தம் கொடுத்து   ஒரு சில அதிகாரிகளின் துவேசச் செயற்பாடுகளிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் ஓர் மதத்தைச் சார்ந்த சிறுதொகையினர் தன்னும் வாழ்வதாக இருந்தால் அவர்களின் மத வழிபாட்டுத் தேவைகளிற்காக கோயில்களை அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை.

ஆனால் முகாம்களிற்குள் வாழும் படையினர் தவிர, பௌத்த சமயத்தைச் சார்ந்த எவரும் இல்லாத நாயாறு நீராவியடி ஏற்றப் பகுதியில்,

அதுவும் பபாரம்பரியமாக இருந்த ஓர் பிள்ளையார் சிலைக்கு சில மீற்றர் தூரத்தில், தொல் பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இவ்விடயம் நடந்தேறியிருப்பதானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் அவர்  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டனம்சி.தவராசாநாயாறு- நீராவியடிபுத்தர்சிலை
Comments (0)
Add Comment