மஹிந்த ராஜபக்ச தலைமையிலான 30 பேர் கொண்ட அமைச்சரவை நாளை சத்தியபிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அதற்காக அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை 30 பேர் அமைச்சரவையை அமைக்க வேண்டுமெனின் நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை கொண்டு வர வேண்டும்.
இதன் காரணமாக அமைச்சரவை நியமனத்தை இரண்டு நாட்களுக்கு பின்நகர்த்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பந்துல குணவர்த்தன நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும், அவரே 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.