நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு…

பேருந்துக் கட்டணங்கள் நாளை  நள்ளிரவு முதல் 4 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் தனியார் பேருந்துச் சங்கங்களுடன் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே   அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறைந்தபட்சப் பேருந்துக் கட்டணமான 12 ரூபாவில் எந்தவித மாற்றமும் ஏற்படாது எனவும், ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிப்புஅமைச்சர்அறிவிப்புகட்டணம்பேருந்து
Comments (0)
Add Comment