யாழ் நாவற்குளிப் பகுதியில் 62 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை சாவகச்சேரி நீதிமன்றம் விடுத்தாளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியேறியுள்ளவர்களையே இவ்வாறு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது.
நாவற்குளியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர், குறித்த குடும்பங்கள் தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் குடியிருப்பாளர்கள் குடியிருக்கும் காணி தொடர்பான உரித்து ஆவணங்கள் இருப்பின் அடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பிக்கமாறும், இல்லையெனில் அங்கிருந்து வெளியேறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.