நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம்…

நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டதனால்  மக்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது

நியூசிலாந்தில் உள்ள டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.

இதன் தாக்கம்  தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதன் சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்ததாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

அதோடு  நியூசிலாந்தின் வடக்கு தீவு, தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

மேலும் நியூசிலாந்து நாடாளுமன்றம் கட்டிடம் நிலநடுக்கத்தால் குலுங்கியதை அடுத்து,   நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும்  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

நாடாளுமன்றம்நியூசிலாந்துநிலநடுக்கம்வெலிங்டன்
Comments (0)
Add Comment