நியூசிலாந்து பயணமானார் ரணில்!

உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சற்று முன்னர் (நண்பகல் 12.15க்கு) நியூசிலாந்து நோக்கிப் பயணமானார். அந்நாட்டுப் பிரதமர் ஜோன் கீ விடுத்த விசேட அழைப்பையடுத்து, மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் பயணமானார். இந்நிலையில், இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்துக்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறையாகும். இதில், பிரதமரின் பாரியார், அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும், அவருடன் பயணமாகினர்.

அதிபர்அமைச்சர்கள்நியூசிலாந்துபயணம்பிரதமர்ரணில்விமானம்
Comments (0)
Add Comment