நிர்பயா வழக்கின் இளம் குற்றவாளி வேறு இடத்துக்கு மாற்றம்

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை முடிவடைந்து விடுவிக்கப்பட இருக்கும் இளம் குற்றவாளி, சிறுவர் சீர்திருத்தச் சிறையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாற்றப்பட்டுள்ள இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இளம் குற்றவாளியை விடுவிக்க தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இதனால் இளம் குற்றவாளி நாளை விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

 இந்நிலையில், நிர்பயா வழக்கில் தண்டிக்கப்பட்ட 20 வயது நிரம்பிய அந்த இளைஞர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 இதனிடையே, நிர்பயாவின் பெற்றோர் உள்ளிட்ட சிலர், இளம் குற்றவாளியை விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்து, சிறுவர் சீர்திருத்தச் சிறை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்பயா வழக்கில் இருந்து இளம் குற்றவாளியை விடுவிக்க தடை விதிக்க மறுத்து டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இளம் குற்றவாளிநிர்பயாபாலியல் வன்கொடுமை வழக்குவிடுதலை
Comments (0)
Add Comment