இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் டுவிட் செய்துள்ளதாவது:
நிர்பயா வழக்கு குற்றவாளி விடுவிக்கப்படுவது மிகவும் கவலைக்குரியது. அவர் விடுவிக்கப்படும் நாள் இந்திய வரலாற்றின் கருப்புநாளாகும். இதில் தலையீடுமாறு குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை ஆணையம் அணுகும் என்றார்.
நிர்பயா வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட இந்த இளம் குற்றவாளி விடுதலை செய்யப்படகூடாது என்றார் ஸ்வாதி. கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி, ஓடும் பேருந்தில் மருத்துவ மானவி நிர்பயா, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைத செய்யப்பட்ட 18 வயது நிரம்பாத இளம் குற்றவாளி ஒருவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து அவர் விடுவிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாயின.
மேலும் அதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதனால் அந்த இளம் குற்றவாளி டிசம்பர் 20 ஆம் தேதி விடுவிக்கப்படுகிறார்.