நீண்ட நாள் தீர்வின்றி காணப்படட நஞ்சுண்டான் குளத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர்புரம்  இளங்கோ புரம் மாணிக்கபுரம் தேராவில் ஆகிய கிராமங்களை  சேர்ந்த மக்கள் தங்களுக்கு உரிய வயல் காணிகள் இல்லாது தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே தமது  பகுதியில் பல நூறு வருடங்களாக பழமை வாய்ந்த ஒரு குளம் ஆகிய நஞ்சுண்டான் குளம் இருப்பதாகவும் அந்த குளத்தை புனரமைத்து தருமாறு பல்வேறு தரப்பினரிடமும்  கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

எனினும்  இந்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற பல பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் மாகாண சபை உறுப்பினர்கள் பலரால் கலந்துரையாடப்பட்ட போதும் இது தொடர்பில் எந்தவிதமான சாதகமான முடிவுகளும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக குறித்த கிராம மக்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களிடம் இந்த விடஜம்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது இதனை தொடர்ந்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களினால் குறித்த விடயம் உரியவர்களின் கவனத்துக்கு  எடுத்துச் செல்லப்பட்டு இந்த விடயம் தொடர்பாக விசேட நிதி ஒதுக்கீடு மூலம் 4 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் இந்த குளம் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட  இருப்பதனால் இந்த குளத்தில் சிரமதானம் மூலம் துப்பரவு செய்கின்ற நடவடிக்கையில் நேற்றைய தினம் (10) மக்கள் ஈடுபட்டிருந்தனர் குறித்த வள்ளுவர்புரம்  மாணிக்கபுரம் இளங்கோபுரம் தேராவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் உழவு இயந்திரங்களில் குறித்த குளத்திற்குச் சென்று அங்கு இருக்கின்ற ஆலயத்தில் வழிபாடு ஒன்றை மேற்கொண்டு இந்த குள சிரமதான  பணிகளில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இந்த குள புனரமைப்பு பணிகள் உரிய தரப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ளது    இதன்போது கருத்து தெரிவித்த மக்கள் மிக நீண்ட காலமாக எங்களுடைய கோரிக்கையாக இருந்த  இந்த குளத்தினை மிக விரைவாக புனரமைப்பதன்  ஊடாக ,

சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வயல் செய்கையை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இதனை உரிய முறையில் செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வேலைத் திட்டத்தை விரைவுபடுத்தி செய்து தருமாறும் இதன் மூலம் தங்களுடைய 4 கிராமங்களும் பலன் பெறும்  என்பதையும் இந்த விடயத்தை கருத்திற் கொண்டு எங்களுக்கு இந்த புனரமைக்க நிதி ஒதுக்கி ஏற்பாடு  செய்து தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும்  நன்றி தெரிவித்துள்ளனர்

குளம்புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு
Comments (0)
Add Comment