தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் சட்டமூலத்தினை மீள் உறுதி செய்த ஒன்ராறியோ நீதிமன்றம்
தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் (TGEWA – BILL 04) ற்கு எதிராக ஸ்ரீ லங்கா ஆதரவினால் கொண்டுவரப்பட்ட வழக்கை நீதிமன்றம் நீராகரித்து தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் சரி என தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒன்ராரியோ பாராளுமன்றம் நிறைவேற்றிய அரசியலமைப்புச் சட்டத்தை நீதிபதி மீள் உறுதி செய்துள்ளார் என்ற சிறந்த செய்தியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இச்சட்டத்தைக் கொண்டு வந்த விஜய் தணிகாசலம் அதைக் காக்க கடுமையாக எம்முடன் உழைத்த ஒண்டாரியோ அரச சட்டவாளர்கள் எம்மால் நியமிக்கப்பட்ட சட்டவாளர்கள், சாட்சிகள், ஆதரவளித்த ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எமது நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம் . – NCCT