அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார். இந்த விசேட நடவடிக்கைக்கு கடலில் இருந்த கப்பலை நெருங்க கடற்படையின் உதவியை பொலிஸார் பெற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய முடிவதாவது,
கடந்த பல மதங்களுக்கு முன்னர் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பு ஒன்று தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் போதிப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் மேற்பார்வையில், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கமல் சில்வாவின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையிலேயே தென் கடலில் உள்ள கப்பல் ஒன்ரில் ஹெரோயின் கடத்தப்ப்டுவதை கண்டுபிடித்த பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தென் பகுதி கடல் பிரதேசத்தால் நகர்ந்துகொண்டிருந்த குறித்த கப்பலை நோக்கி கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சிறப்பு பொலிஸ் அணியுடன் கடற்படையின் ஒத்துழைப்புடன் சென்றுள்ளனர்.
இந் நிலையில் குறித்த கப்பலை நடுக்கடலில் வைத்தே சோதனைக்கு உட்படுத்தியுள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரிகள் கப்பலில் 100 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் இருப்பதைக் கண்டறிந்தனர். அவற்றைக் கைப்பற்றிய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கப்பலில் இருந்த 10 ஈரானியர்கள், ஒரு பாகிஸ்தான் நாட்டவர் ஆகியோரை கைது செய்தனர்.
இதனிடையே இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மற்றொரு குழு நேற்று நிலப் பிரதேசத்தில் இந்த கடத்தலுடன் தொடர்புடைய மூவரைக் கைது செய்தது. இவர்களும் வெளி நாடவர்களாவர். இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரினால் கைது செய்யப்ப்ட்டுள்ளனர். இந் நிலையில் கைப்பற்ரப்பட்ட 100 கிலோ ஹெரோயின் கப்பலுடன் நேற்று இரவு வேளையில் கொழும்பு துறை முகத்துக்கு கொண்டுவரப்பட்டது. 100 கோடி ரூபா ஹெரோயினும் சந்தேக நபர்களும் தற் சமயம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்ப்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கப்பலானது கொழும்பு துறை முகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.