அந்த ஆவணத்தில் உள்ளதாவது, “கடந்த 70 ஆண்டுகளாக விமான விபத்தில் நேதாஜி இறந்தாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்துடன் தொடர்புடைய உறுதியான தவிர்க்க முடியாத 4 தனித்தனி அறிக்கைகள் உள்ளன.
1945 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காலை ஜப்பான் நாட்டு விமான படையின் வெடிகுண்டு வீசுகிற வீரர் வியட்நாமின் டோரனேவில் இருந்து விமானத்தை எடுத்துள்ளார். அந்த விமானத்தில் நேதாஜி-வுடன் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர். அதில் ஜப்பான் ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் சுனமாசா ஷிடை உடனிருந்தார். ஹிட்டோ-தைபை-டைரென்-டோக்கியோ பாதை வழியாக அந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 4-ம் தேதி நேதாஜியின் இந்த விமான பயணத்திற்கு முந்தைய நாள்(17-08-1945) நிகழ்வுகள் தொடர்பான ஆவணங்களை அந்த இணையதளம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து வருகின்ற ஜனவரி 16-ம் தேதியன்று நேதாஜியின் விமான விபத்தை தொடர்ந்து 18-8-1945 அன்று இரவு நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களை அந்த இணையதள வெளியிட உள்ளது. அந்த இணையதளத்தை சுயசார்பு பத்திரிகையாளரும், நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.