நைஜிரியாவின் துறைமுக நகரில் அதிபர் முகமது புகாரியின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் புகாரி ஈடுபட்டிருந்த போது அவரைக் காண கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதேவேளை இந்த நெரிசல் குறித்து அறிந்த அதிபர் முகமது புகாரி மிகுந்த வேதனையடைந்திருப்பதாக அதிபர் மாளிகை இருந்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.