படுகொலை செய்யப்பட்ட பொலிஸாருக்கு நினைவுத்தூபி..

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸாருக்கு நினைவுத்தூபியொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீர துட்டுகெமுனு அமைப்பின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மேர்வின் சில்வா இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய அரசாங்கம் வடக்கு மக்கள் குறித்தே கரிசனை கொண்டுள்ளதாகவும்,  தெற்கு மக்கள் குறித்து இம்மியளவும் சிந்திக்கவில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அதோடு நல்லிணக்க முயற்சிகள் காரணமாக சிங்களவர்களுக்கே பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், சிங்களவர்களுக்காக பேச யாருமே இல்லை என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை திருக்கோயிலில் வைத்து விடுதலைப் புலிகளால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட பொலிசாருக்கு நியாயம் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு நினைவுத்தூபிகள் அமைக்கும் நாட்டில் நாட்டுக்காக உயிரிழந்த பொலிஸாருக்கு நினைவுத்தூபிகள் அமைக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே அவ்வாறு உயிரிழந்த பொலிசார் படுகொலை செய்யப்பட்ட திருக்கோயில் பிரதேசத்தில் அவர்களுக்கான நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட  உள்ளதாகவும்  மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறைநினைவுத்தூபிகள்பொலிஸார்மேர்வின் சில்வாவிடுதலைப் புலி
Comments (0)
Add Comment